MARC காட்சி

Back
இறை வடிவங்கள்
000 : nam a22 7a 4500
008 : 170524b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a இறை வடிவங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியம்
500 : _ _ |a

          காஞ்சிபுரத்தில் உள்ள கட்டுமானக் கோயில்களில் தொன்மையானது கைலாசநாதர் கோயில். இது முதலாம் இராஜசிம்ம பல்லவன் காலத்தில் எழுப்பப்ட்டது. இக் கோயில் கட்டப்பட்ட காலத்தில் கோயிலின் அனைத்துப் பகுதிகளும் வண்ணப்பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன இடங்களில் சிறிதளவு தடயங்களே இருக்கும் வேளையில், கோயில் கருவறைக்கு வெளிப்புற சுவற்றில் உள்ள சிறிய கருவறைகளில் சிலவற்றில் ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள 44 வது கருவறையில் உள்ள  சோமஸ்கந்தர் ஓவியத்தை 1931 ஆம் ஆண்டு ழுவோ துப்ராயில் கண்டறிந்து உலகிற்கு அறிமுகம் செய்தார். தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினரால் 23 வது கருவரையில் சோமஸ்கந்தர் ஓவியத்தைக் கண்டறியப்பட்டது.  இங்குள்ள ஓவியங்கள் முதலில் மஞ்சள் காவி மற்றும் செங்காவி வண்ணத்தில் கோட்டோவியமாக வடிவமைத்துக்கொண்டு பின்னர் உரிய வண்ணங்களை நேர்த்தியுடன் தூரிகையால் நிறப்பப்பட்டு இறுதியாக அடர் கருஞ் சிவப்பு  வண்ணத்தால் கோட்டோவியம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு ஓவியத்தில் கையில் புல்லாங்குழலுடன்  மனித – பறவை உடலமைப்பைக் கொண்ட  கின்னரன் கையில் புல்லாங்குழலுடனும் ,  கின்னரி சிங்கியுடனும்  காட்டப்பட்டுள்ளனர். இங்குள்ள ஓவியங்களில்  உள்ள உருவங்கள் வரையும் முறை, வண்ணங்கள், கட்டமைப்பு போன்றவை அஜந்தா ஓவியப் பாணியோடு தொடர்புள்ளதாக காணப்படுகின்றது. மேலும் இவ்வோவியங்கள் சமகால பல்லவர் சிற்ப அழகியல் மற்றும் வடிவமைப்பை  ஒத்த தன்மையுடன் உள்ளது. இது தவிர பல இடங்களில் சிற்பங்களின் மேலேயே பூசப்பட்ட ஒவியப்பகுதிகளும் காணக்கிடைக்கின்றது.

          இங்குள்ள ஓவியங்களில் ஒன்று சிவன் பார்வதியோடு, இடையே கந்தன் என  சோமாஸ்கந்த மூர்த்தியாகக் காணப்படுகிறது. சிவனுடைய உருவத்தில் பெரும் பகுதி அழிந்து விட்டது. இடது கையில் மழுவும் வலது கையில் வாகுவலயம் கொண்டவராக உள்ளார்.

          இங்குள்ள ஓவியங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வரைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  முதல் கட்ட ஓவியங்கள் ராஜசிம்மன் காலத்திலேயே வரையப்பட்டவை, முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு இங்குள்ள கருவரையில் உள்ளது. அதற்கு மேலேயே சுதை பூசி ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதால் அவை 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்ட இரண்டாம் கட்ட ஓவியங்களாக கருதப்படுகின்றது. மூன்றாம் கட்ட ஓவியங்கள் 14 ஆம் நூற்றாண்டில் காஞ்சியை வெற்றி கொண்ட விஜயநகர மன்னன் குமார கம்பணன் காலத்து கல்வெட்டு காணப்படுகின்றது. அவன் காஞ்சியில் பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளமையால் இவ்வோவியங்கள் இம்மன்னனது காலத்தில் வரைந்ததாக கருதுலாம்.

          மூன்றாவதாகத் தீட்டப்பட்ட ஓவியம் 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் குமார கம்பணன் என்ற விஜய நகர அரசன் காலத்தில் தீட்டப்பட்டிருக்கக் கூடும். இங்குள்ள கல்வெட்டிலிருந்து குமார கம்பணன் காஞ்சிபுரத்தை வெற்றி கண்டவுடன் நேராக இக்கோயிலுக்கு வந்து, இக்கோயிலில் வழிபாடு இல்லாதிருந்ததைக் கண்டு வருந்தி மீண்டும் வழிபாடு சிறக்கச் செய்தானென்று அறிகிறோம். அக்காலத்தில் இவ்வோவியங்கள் தீட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
520 : _ _ |a

          காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கும் செழுமையான கோயிலாகும். இங்குள்ள ஓவியங்கள் இக்கோயில் கட்டிய காலத்திலே வரையப்பட்டதாக பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கோயில் கட்டிய பின் சில நூறு ஆண்டுகள் கழித்து உருவாக்கியிருக்கலாமென கருதுகின்றனர்.

653 : _ _ |a பல்லவர், இராஜசிம்மன், சோமாஸ்கந்தர், கின்னரர், கின்னரி, சுவரோவியம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, கைலாசநாதர் கோயில்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a கைலாசநாதர் கோயில் |b # |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
914 : _ _ |a 12.8422576
915 : _ _ |a 79.6897132
995 : _ _ |a TVA_PNT_00019
barcode : TVA_PNT_00019
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_முன்புறத்-தோற்றம்-0001.JPG

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_சிவன்-பெருமாள்-0002.JPG

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_கின்னரர்கள்-0003.JPG

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_கின்னரர்கள்-0004.JPG

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_சிதைந்த-ஓவியம்-0005.JPG

TVA_PNT_00019_கைலாசநாதர்-கோயில்_சிற்பம்-ஓவியம்-0006.JPG